Pages

Sunday, April 8, 2012

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் இந்திய உயர் ஸ்தானிகர் பேச்சு!

Sunday, April, 08, 2012
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமை குறித்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா பேசியதாக ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

சிலை சேதப்படுத்தப்பட்டமை குறித்து இந்தியா பேசியதுடன் காந்தியின் சிலையை மீளமைக்குமாறும் கோரியது. இலங்கை வெளிவிவகார செயலாளர் கே. அமுனுகமவுடன் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா கலந்துரையாடினார். இந்தியாவின் கவலையை அவர் தெரிவித்ததுடன் இச்சம்பவம் குறித்து அவசர விசாரணை நடத்துமாறும் அவர் கோரினார். கிழக்கு மாகாண முதலமைச்சர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கவனத்துக்கும் இந்திய உயர் ஸ்தானிகர் கொண்டு சென்றார்' என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment