Pages

Wednesday, April 11, 2012

உரிய வீசா அனுமதியை பெற்றுக் கொள்ளாது பெருமளவிலான இந்தியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக குற்றச்சாட்டு!

Wednesday,April,11,2012
இலங்கை::உரிய வீசா அனுமதியை பெற்றுக் கொள்ளாது பெருமளவிலான இந்தியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதிகளவான இந்தியர்கள் இலங்கையில் தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் பலர் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கைக்கு சென்றவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உரிய வீசா ஆவணங்கள் இன்றி வர்த்தக மற்றும் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வவுனியாவில் இந்திய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதனைத் n;தாடர்ந்து காவல்துறையினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment