Pages

Friday, April 13, 2012

வட கொரிய ஏவுகணைத் திட்டம்; கண்டனம் வெளியிட்டுள்ள ஜி எட்டு நாடுகள்!

Friday, April, 13, 2012
வட கொரியா நீண்ட தூர ஏவுகணையை ஏவியமைக்கு ஜி எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் தீர்மானங்களை மீறும் வகையில் வட கொரியா செயற்பட்டுள்ளதாக குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்த ஏவுகணை திட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜி எட்டு நாடுகள் குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டது.

எதிர்காலத்தில் தடைசெய்யப்பட்ட ஏவுகணை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என வட கொரியாவை வலியுறுத்தியுள்ள ஜி எட்டு நாடுகள், கொரிய தீபகற்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளன.

சர்வதேச ரீதியான கண்டனங்களுக்கு மத்தியில் வட கொரிய செயற்படுத்திய ஏவுகணை திட்டம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment