Tuesday, April 10, 2012தஞ்சை::தஞ்சையை சேர்ந்த சகுந்தலா என்பவரது வீட்டை இடித்து அபகரித்தது தொடர்பான வழக்கில் ஜாமீன் கேட்டு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன், சிவக்குமார் ஆகியோர் தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி தர்மராஜ், அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் தஞ்சை 2வது குற்றவியல் கோர்ட்டில் நடராஜன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. மணல் திருட்டு வழக்கில் ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தர்மராஜ், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment