Pages

Saturday, April 28, 2012

நோர்வே புலிகளின் வலையமைப்பு மீண்டும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு!

Saturday, April, 28, 2012
நோர்வேயில் உள்ள புலிகளின் வலையமைப்பு மீண்டும் இலங்கையில் போர் ஒன்றை ஏற்படுத்துவதற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக 19 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று நோர்வே நாடாளுமன்றத்தின் பிரதித் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் அது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த குழுவில், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம் அடங்கியுள்ளதாகவும் ஒஸ்லோவில் இயங்கும் புலிகளின் வானொலி மூலம் உயிரிழந்த குண்டுதாரி ஒருவரை பாராட்டி, தமிழ் இளையோரை பயங்கரவாத்தை செயற்படுத்துமாறு கேட்டுள்ளதாகவும் இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நோர்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், நோர்வேக்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா, பிரதித்தூதுவர் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட நோர்வேயில் சுற்றுலா முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வரும், தமிழரான கணவனும் மனைவியும், மாதம் தோறும் நிதி வழங்க வேண்டும் என புலிகள் தம்மை அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள நோர்வே நாடாளுமன்றத்தின் பிரதித் தலைவர், இதற்கு எதிரான எடுக்க வேண்டிய நடவடிக்கையை முன்வைக்குமாறு இலங்கை குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment