Pages

Tuesday, April 3, 2012

சரத் மனமேந்திரவின் கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது!

Tuesday, April, 03, 2012
இலங்கை::நவ சிஹெல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திரவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் கைத்துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பொலிஸாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகளுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பொருட்டு சரத் மனமேந்திர மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நவ சிஹல உறுமயவின் உறுப்பினரான, கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

No comments:

Post a Comment