Friday, April, 06, 2012இலங்கை::காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
நீதிமன்றத்தில் பொறுப்பிலுள்ள தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றிவைக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
காலி நீதவான் நீதிமன்றத்தின் வழக்குத் தடயப் பொருட்களுக்கு பொறுப்பான கண்காணிப்பு உத்தியோகத்தரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற பதிவாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment