Pages

Wednesday, April 4, 2012

கொழும்பு நவகம்புர பகுதியில் பொதுமகன் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்!

Wednesday,April,04,2012
இலங்கை::கொழும்பு கிராண்பாஸ் காவற்துறைப்பிரிவுக்குட்பட் நவகம்புர ட பகுதியில் பொதுமகன் ஒருவர் வெள்ளை வானில் வந்த அடையாளந் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 45 வயதான பாலகிருஸ்ணன் ஆனந்தன் என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். தனது குழந்தையை பாடசாலையில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டுள்ளார்.

வெள்ளைவானில் வந்த நால்வர் இவரது மோட்டார் சைக்கிளை இடித்து விழுத்தி இவரை பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். சில நிமிடங்களுக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொது மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment