Tuesday, April 10, 2012இலங்கை::முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை என அவரது மனைவி சம்பா சோமரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழர் என்ற போதிலும் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் நோக்கிலேயே முன்னணி சோசலிச கட்சியை ஆரம்பிக்க குணரட்னம் முயற்சித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் உருவாக்கத்திற்காக குணரட்னம் ஆற்றிய பங்களிப்பே இந்த கடத்தலுக்கான நேரடிக் காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வலுவான எதிர்க்கட்சிகள் கிடையாது எனவும், சகல எதிர்க்கட்சிகளையும் அரசாங்கம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment