Pages

Saturday, April 28, 2012

ஐ.தே.க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் மே தினக் கூட்டங்களில் பங்கேற்பது கவலைக்குரியது – அரசாங்கம்

Saturday, April, 28, 2012
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டாக இணைந்து மே தினக் கூட்டங்களில் பங்கேற்பது கவலைக்குரியது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்;ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மே தினக் கூட்டம் நடத்துவதனையிட்டு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால், ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் கண்டனம் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment