Pages

Sunday, April 8, 2012

ஐக்கிய நாடுகள் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும் உரிமை எமக்கும் உள்ளது: இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா!

Sunday, April, 08, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும் உரிமை எமக்கும் உள்ளது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அந்நிய அமைப்பு அல்ல.

சிலர் அதனை அந்நியமாக்க முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் நாமும் உறுப்புரிமை வகிக்கின்றோம்.

எமது பக்க நிலைப்பாடுகளை வெளியிடக் கூடிய உரிமை உள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய அமைதி காக்கும் படையினரை விடவும் இலங்கைப் படையினர் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினோம்.

ஆனால், வெளிநாடுகளின் வழிகாட்டல்களுக்கு அமைய போர் முன்னெடுக்கப்படவில்லை.

உள்நாட்டில் எமக்கே உரிய முறையில் போர் வியூகங்கள் வகுக்கப்பட்டன என சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment