Pages

Thursday, April 5, 2012

முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனுக்கு அடி : சென்னையை நசுக்கியது மும்பை!

Thursday, April 05, 2012
சென்னை::ஐபிஎல் சீசன் 5 போட்டிகள் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கின. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் மோதின. டாசில் வென்ற மும்பை கேப்டன் ஹர்பஜன் சென்னையை பேட் செய்ய அழைத்தார். ஆட்டத்தின் 4வது பந்திலேயே டூபிளஸ்சி ரன்அவுட் செய்யப்பட்டார். அதன்பின் சீரான இடைவெளியில் சென்னை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. டூபிளஸ்சி 3, விஜய் 10, பிராவோ 19, மோர்க்கல் 3, பத்ரிநாத் 10, டோனி 4, ஜடேஜா 3, அஸ்வின் 3, ஜகதி 6, போலிங்கர் 3 என அடுத்தடுத்து நடையை கட்டினர். ரெய்னா மட்டும் 26 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன் விளாசினார். 19.5 ஓவரில் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியில் டூபிளஸ்சி, டோனி, அஸ்வின் ஆகியோர் ரன்அவுட் செய்யப்பட்டனர். மும்பை பவுலர்கள் மலிங்கா, பொல்லார்டு, ஓஜா தலா 2 விக்கெட்டும், பிராங்க்ளின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர் லெவியின் அபார ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. லெவி 35 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன் விளாசினார். டெண்டுல்கர் 16 ரன் எடுத்திருந்த போது கையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். ரோகித்சர்மா 0, ராயுடு 18, பிராங்க்ளின் 25 ரன் எடுத்தனர்.
மும்பை அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 16.5 ஓவரிலேயே 115 ரன் எடுத்து இந்த ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது லெவிக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment