Pages

Wednesday, April 4, 2012

சொந்த இடங்களில் குடியேற்றக் கோரி மக்கள் அரச அதிபரிடம் கோரிக்கை!

Wednesday,April,04,2012
இலங்கை::யாழ் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு கோரி சில பிரதேச மக்கள் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

குறித்த மனு நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரியுள்ளனர்.

குறித்த பகுதிகளிலிருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் தம்மை விரைவில் மீள்குடியேற்றுமாறு அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுவை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment