Pages

Saturday, April 14, 2012

தங்கம் கடத்த முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது!

Saturday, April, 14, 2012
சென்னை::தங்கம் கடத்த முற்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான இவர் 800 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்ட வேளையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் மகன் மற்றும் மருமகள் சென்னையில் இருப்பதாகவும் விடுமுறை ஆகையால் அவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இவரது தகவல்களில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அப்பெண் அணிந்திருந்த நகைகளை சோதனையிட்டனர். வளையல்கள் மற்றும் மோதிரம் என்பன புதிதாக செய்யப்பட்டதை அதிகாரிகள் உணர்ந்தனர்.

இதேவேளை ஏனைய இரண்டு பெண்களும் இவ்வாறு நகை அணிந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை விசாரித்த போது அறிமுகம் இல்லாத யாரோ நகைகளை தந்ததாகவும் சோதனை முடிவடைந்ததன் பின்னர் திருப்பித் தருமாறும் தந்ததாக கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். சுமார் 22 லட்சம் ரூபா பெறுமதியான 12 நகைகளை சென்னை விமான நிலைய சுக்க அதிகாரிகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment