Pages

Thursday, April 12, 2012

ஆட்கடத்தல் கைத்தொழிலை தடுத்து நிறுத்துங்கள்: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஐ.நாவிடம் கோரிக்கை!

Thursday, April 12, 2012
இலங்கை::ஆட்கடத்தல் உடனடியாக தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.,ஆள் கடத்தும் ‘கைத்தொழிலின்” மிக அசிங்கமான ஓர் அம்சம் கடந்த 9ஆம் திகதி பிரேம்குமார் குணரட்ணம் என்பவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த நபர் 6ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் முன்வரிசை சோஷலிஸ கட்சியையும், மனித உரிமை அமைப்புகளையும் ஆஸ்ரேலிய அரசையும் உடனடியாக செயலில் இறங்கும்படி செய்துவிட்டது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தபாய ராஜபக்ஷ உடனடியாகவே ஆள்கடத்தல் பற்றி எதுவுமே தெரியாது என்று அறிவித்திருந்தார். முன்னதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹிலுகல்ல கருத்து வெளியிடுகையில்….. குணரட்ணம் மற்றும் திமுத்து ஆட்டிக ஆகியோரை அரசு கடத்துவதற்கான காரணம் எதுவுமே கிடையாது என்று கூறியிருந்தார். பொலிஸ் தரப்புப் பேச்சாளர் அஜித் ரோஹண, குணரட்ணம் இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டு மட்டகொடவுக்கு கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் பொலிஸ் குற்றப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார் என்று கூறினார்.

குணரட்ணம் மற்றும் திருமதி ஆட்டக்கல ஆகியோர் கடத்தப்பட்டது மற்றும் ஏனைய ஆள்கடத்தல்கள் தொடர்பாகவும் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா. மனித உரிமைய ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment