Friday, April, 06, 2012இலங்கை::வவுனியா கற்குளம் மற்றும் ஒலுமடு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வீசிய கடும் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு வீசிய கடும் காற்றினால் சுமார் 150 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரினால் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
இந்த மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளையும் ஒருவாரத்திற்குரிய உலர் உணவுப் பொருட்களையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஊடாக தற்காலிக கூடாரங்கள் மற்றும் உதவிப் பொருட்களை நேற்று மாலை அந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
No comments:
Post a Comment