Pages

Monday, April 2, 2012

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்பட்ட நிலைமை தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது-ஜே வி பி யின் பொது செயலாளர் டில்வின்!

Monday, April 02, 2012
இலங்கை::மற்ற நாடுகளின் பிரச்சினையை பார்ப்பதற்கு முன்னர், அரசாங்கம் உள்நாட்டு பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஜே வி பி தெரிவித்துள்ளது.

ஜே வி பி யின் பொது செயலாளர் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்பட்ட நிலைமை தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவது போல பார்ப்பது, இலங்கை அரசியலுக்கு உகந்தது இல்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவின் பிரச்சினை என்ற அடிப்படையில், அந்த விடயத்தில் தலையிடாமல், உள்நாட்டில் காணப்படுகின்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment