Sunday, April 8, 2012

இலங்கை இராணுவத்தினரின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட புலி உறுப்பினரின் புதல்வி!

Sunday, April, 08, 2012
இலங்கை::இராணுவத்தினரின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட புலி உறுப்பினரின் புதல்வி:-

கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 20 வயதுடைய கஜிந்தினியின் உயிரை இராணுவத்தினர் தமது முயற்சியால் காப்பாற்றியுள்ளனர்.

அச்சுவேலியில் வசிக்கும் கஜிந்தினியின் தந்தை ஆயுதம் தரித்த புலியுறுப்பினர் ஆவார். இவர் பாதுகாப்புப் படைகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் இழந்தார். அதனைத் தொடர்ந்து அவளது தாயார் அவர்களது குடும்பத்தை காப்பாற்றும் முகமாக கூலி வேலை செய்துவந்தார்.

கஜிந்தினி பல தடவைகள் மருத்துவர்களிடமும், இருதய நோய் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஆனால் அவற்றில் எதுவும் பயனளிக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் அறிவுருத்தலின் கீழ், யாழ் மக்களிக் நலன்கருதி நடமாடும் வைத்திய முகாங்கள் இடம்பெற்றுவந்தன. அவ் வைத்திய முகாமொன்றில் சிகிச்சை பெறுவதற்கென கஜிந்தினி தனது தாயுடன் வருகை தந்திருந்தார்.

அவ் வைத்திய முகாமிற்கு இந்தியாவில் இருந்து ஆசிரி வைத்தியசாலைக்கு வருகைதரும் இருத நோய் மருத்துவர் விவேக் குப்டாவும் கலந்துக்கொண்டிருந்தார். கஜிந்தினி இன்னும் 15 நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும்மென கண்டறிந்த அவர் இது தொடர்பாக அவளது தாய்க்கு உடனடியாக தெரியப்படுத்தியுள்ளார்.

தனது மகளின் உயிரை காப்பாற்றித் தருமாறு கேனல் வீஜீன்ரவிடமும் மருத்துவர்களிடமும் மன்றாடிக் கேட்டுக்கொண்டார் அவளது தயார்.

கேனல் வீஜீன்ரவின் முயற்சியின் மூலம், யாழ் பாதுகாப்புப் படையினருடன் நற்புறவு பேணும் பொறியியளார் திருபநாதன் முன்வந்து 400,000 ரூபாவை வழங்கியுள்ளார்.

அதன்பின் ஆசிரி வைத்தியசாலை வைத்தியர்களான அனில் பெரேரா, மஞ்சுல கருணாரத்தின மற்றும் விவேக் குப்டா ஆகியோர் இலவசமாக சத்திரசிகிச்சை செய்ய முன்வந்தனர்.

யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் ஏற்பாட்டில் கஜிந்தினியும், அவளது தாயும் கொழும்பில் உள்ள ஆசிரி வைத்தியசாலைக்கு இலவச விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கஜிந்தினி கொழும்பில் தங்கியிருந்தகாலம் வரை அனைத்து தங்குமிடவசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கு 3ஆவது விஜயபாகு ஆட்லரி படைப்பிரிவினர் பொறுப்பாக இருந்தனர்.

கஜிந்தினியின் சத்திரசிகிச்சை மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. கஜிந்தினி தற்போது மிகவும் நலமாகவுள்ளார்.

தனது குடும்பத்திற்காக இம் மா பெரும் உதவியை வழங்கிய இராணுவத்தினருக்கு தனது நன்றிகளை கஜிந்தினியின் தாய் தெரிவித்துக்கொண்டார். இராணுவத்தினரின் இம் மனிதநேய செயற்பாட்டிற்கு யாழ் மக்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment