Tuesday, April 3, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் ஏற்பாடு செய்யப்படவில்லை-இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்!

Tuesday, April, 03, 2012
இலங்கை::அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எவ்வித பேச்சுவார்த்தையும் ஏற்பாடு செய்யப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு வரும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுக்கவில்லை என தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மே 18ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு ஜீ.எல்.பீரிஸுக்கு கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சி குழுவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த எதிர்பார்த்துள்ளபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா வரும்படி அழைக்கவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment