Pages

Monday, April 9, 2012

முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நானே போட்டியிடுவேன் - சிவநேசதுரை சந்திரகாந்தன்!

Monday, April, 09, 2012
இலங்கை::கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தானே போட்டியிட போவதாகவும் அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுமா என்பது பற்றி எனக்கு இதுவரை எந்தத் தகவலும் அறியக்கிடைக்கவில்லை. எவரும் என்னுடன் அதைப்பற்றிப் பேசவுமில்லை. எனினும் மாகாணசபை கலைக்கப்பட்டால் முதலமைச்சர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். இப்போது முதலமைச்சராக நான் பணியாற்றுகிறேன். அடுத்த முறையும் போட்டியிடுவேன். இதில் வேறு கேள்விக்கே இடமில்லை என முதலமைச்சர் சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விடயம் தொடர்பில் ஏதாவது விட்டுக் கொடுப்பை மேற்கொள்வதா இல்லை என்பது குறித்த தனது நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கப்பட்டனர் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை ஜூலை மாதமளவில் கலைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment