
Thursday, April 05, 2012இலங்கை::கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் கடுகதி ரயிலில் பிரயாணிகளின் நலன்கருதி எக்ஸ்போ லங்கா நிறுவனம் சகல வசதிகளுடனான குளிரூட்டப்பட்ட எக்ஸ்போ சொகுசு ரயில் பெட்டியொன்றை கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் இணைத்துள்ளது.
வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து இரவு 9 புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5.10 திருகோணமலையை சென்றடையும்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் திருகோணமலையிலிருந்து 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 4.05 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
குறித்த சொகுசு ரயில் பெட்டியில் பயணிக்கும் பிரயாணிக்கு ஒரு வழி பயணத்திற்காக 1,900 ரூபா அறவிடப்படுகின்ற நிலையில் 3 – 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 1,450 ரூபா அறவிடப்படுகின்றது.
இதில் பிரயாணிகளுக்கு குளிரூட்டி சேவையுடன் இரவு நேர சாப்பாடு, வரையறையற்ற தேநீர் மற்றும் கோப்பி ஆகியன இலவசமாக பரிமாறப்படுகின்றன.
ஏற்கெனவே கொழும்பிலிருந்து கண்டி, பதுளை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கான கடுகதி ரயிலில் இது போன்ற எக்ஸ்போ சொகுசு ரயில் பொட்டி இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment