Pages

Thursday, April 5, 2012

இந்து கோவில் சிலை உடைப்பு : மலேசியாவில் வாலிபர் கைது!

Thursday, April 05, 2012
கோலாலம்பூர்::மலேசியாவில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலுக்குள் நுழைய முயன்ற, 29 வயது நபர், கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளதால் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்."கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment