Saturday, April 7, 2012

வவுனியாவில் இந்தியர் கைது!

Friday, April, 06, 2012
இலங்கை::வவுனியா நகரில் அனுமதிப்பத்திரமின்றி நடைபாதை புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் அனுமதிப்பத்திரமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் இன்றைய தினம் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment