Pages

Thursday, April 5, 2012

அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்ளாதேஷ் மாலைதீவு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

Thursday, April 05, 2012
இலங்கை::இலங்கையின் மனித உரிமை விடயங்களை பாதுகாப்பதில் அயல் நாடான பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு என்பன எமக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு இலங்கை மக்கள் நன்றிகளை தெரிவிப்பதாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பங்களாதேஷ வர்த்தக அமைச்சர், டிலிப் பர்வா மற்றும் மாலைதீவு பொருளாதார அமைச்சர் முஹம்மத் அஹம்மத் ஆகியோரிடம் தெரிவித்தார்.
அமைச்சில் இடம் பெற்ற தனித்தனி சந்திப்புக்களின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் ஏற்றுமதி, குறித்து அமைச்சர் விளக்கமளித்தார். குறிப்பாக பங்களாதேஷ் இலங்கையில் மருத்துவ பொருட்களை தயாரிப்பதற்கான முதலீடுகளை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தமது அரசாங்கத்தின் துறை சார்ந்த பிரதி நிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்து கவனம் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் அமைச்சர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் எடுத்துரைத்தார்.

அதே வேளை மாலைதீவு எந்த சந்தரப்பத்திலும் இலங்கையுடன் நெருங்கி செயற்படுவதாகவும், ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதும், இரு நாட்டு சகோதர உறவுகள் மற்றும் உதவி செய்யும் மனப்பக்குவத்தில் மாற்றம ஏற்படப் போவில்லை என்றும் இலங்கையை தாங்கள் அதிகமாக நேசிப்பதாகவும் பங்களாதேஷத்தின் பொருளாதார அமைச்சர் முஹம்மத் அஹமத் அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் கூறினார்.

No comments:

Post a Comment