Pages

Sunday, April 8, 2012

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகள் நளினி-முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு!

Sunday, April, 08, 2012
வேலூர்::முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகள் நளினி-முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு:-

வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் போலீஸ் ஒத்திகை நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் கணவன் - மனைவி என்பதால், 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேசிக் கொள்ள சிறைத் துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில், 75 போலீசார், 25 சிறை அதிகாரிகள் காலை 7 மணிக்கு, மத்திய ஆண்கள் சிறையில் இருந்து முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில் அரை மணி நேரம் இருவரும் சந்தித்துப் பேசி கொண்டனர். அப்போது, நளினி விடுதலை குறித்தும், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கக்கோரி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்தும், வழக்கு விவரங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக, சிறைத்துறையினர் கூறினர்.
பின்னர் 7.30 மணிக்கு, முருகன் ஆண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment