Pages

Tuesday, April 3, 2012

தேசிய பாதுகாப்பு மையம் கண்டிப்பாக வேண்டும் : சிவ்சங்கர் மேனன்!

Tuesday, April, 03, 2012
புதுடெல்லி::தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மையம் உடனடியாக செயல்படுத்தப்படவேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிக அபாயங்களை நாடு சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், பழங்கால முறைப்படி செயல்பட்டு வரும் காவல் துறைகளால் இதனை சமாளிக்க முடியாது என்று கூறினார். ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்து முடிந்த பின்னர் அதுகுறித்து வருத்தப்படுவதை விட, முன்கூட்டியே தயாராக இருப்பதுதான் சிறந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும், இதை கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு அமைப்பு உருவாக்கப் பட்டிருப்பதாகவும், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த மாற்றங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை உருவாக்க முயற்சிக்கும் போது தேவையற்ற விவாதங்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment