Pages

Wednesday, April 11, 2012

சவுதியில் பெண் மரணம்; முகவரகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!

Wednesday,April,11,2012
இலங்கை::சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நிலையில் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த கொஸ்கமவைச் சேர்ந்த பெண்ணை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அலுவலகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 10, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள முகவர் நிலையத்தின் அனுமதியை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கட்டடமொன்றில் இருந்து குதித்தே குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான பொறுப்பை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வசம் ஒப்படைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர், குறித்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவர் நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment