Pages

Friday, April 13, 2012

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திப்பதே விஜயத்தின் நோக்கம் - சுதர்சன் நாச்சியப்பன்!

Friday, April, 13, 2012
சென்னை::இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நேரில் சந்திப்பதே அந்த விஜயத்தின் நோக்கமென இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செல்லவிருக்கும் இந்திய நாடாளுமன்ற குழுவின் பயணத் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் விருந்துபசாரமாக இருப்பதாக தமிழக முதல்வலர் ஜெயலலிதா ​ஜெயராம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நாச்சியப்பன் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

மோதல்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் கண்டறியும் நோக்கிலேயே இந்த விஜயத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தில் ஈடுபடவுள்ள இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிலிருந்து தமது உறுப்பினரை விலக்கிக்கொள்வதாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment