Wednesday,April,11,2012இலங்கை::புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இலங்கை இராணுவம் சர்வதேச முறைகளை கையாளவில்லை - சவேந்திர சில்வா:-
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில், ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிட இலங்கைக்கு உரிமை இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் சவேந்திர சில்வா, கலந்துக்கொள்வாரா, அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதை கண்காணிக்க புலிகளுக்கு ஆதரவான ஊடவியலாளர் மெத்தியூ ரசல்ஸ்லி அங்கு சென்றிருந்தாக திவயின குறிப்பிட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சவேந்திர சில்வா, புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இலங்கை இராணுவம் சர்வதேச முறைகளை கையாளவில்லை என தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
புலிகளின் ஆதரவாளர் எனக் கூறும் ஊடகவியலாளர் மெத்தியூ ரசல்ஸ்லி ஐ.நாவின் இன்னர் சிட்டி பிரஸ்ஸின் ஊடகவியலாளர் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment