Thursday, April 12, 2012

எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி காலமானார்!

Thursday, April 12, 2012
சென்னை::நடிகர் எம்.என்.நம்பியா ரின் மனைவி ருக்மணி, நேற்றிரவு காலமானார். அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை நடக்கிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியா ரின் மனைவி ருக்மணி நம்பியார் (82). இவர் கடந்த 15நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30 மணிக்கு ருக்மணி இறந்தார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது. நம்பியார் - ருக்மணி தம்பதியருக்கு 2 மகன், ஒரு மகள். மூத்த மகன் சுகுமாரன் நம்பியார் மாரடைப்பால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவர் பா.ஜ.வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். மற்றொரு மகன் மோகன் நம்பியார் தொழிலதிபராக உள்ளார். மகள் சினேகா சென்னையில் வசித்து வருகிறார். ருக்மணியின் இறுதிச் சடங்கு, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment