Wednesday,April,04,2012சென்னை::மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவை காண கொளுத்தும் வெயிலிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்தனர்.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் திருக்கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையடுத்து அறுபத்து மூவர் விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கோயிலில் இருந்து வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி 63 நாயன்மார்கள் பல்லக்கில் மாடவீதிகளில் உலா வரும் காட்சி மேளதாளம¢ நாதஸ்வரம் முழங்க இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
நாயன்மார்கள் பவனி வரும் காட்சியை கண்டு தரிசிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதலே மயிலாப்பூருக்கு வரத்தொடங்கினர்.
கொளுத்தும் வெயிலில் வந்து குவியும் பக்தர்களுக்கு மயிலை மாடவீதிகள் லஸ் சந்திப்பு ஆழ்வார்பேட்டை மந்தவெளி தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அலங்கார பந்தல் அமைத்து மோர் சர்க்கரை பொங்கல் தயிர் சாதம் எலுமிச்சை சாதம் சாம்பார் சாதம் குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொண்டு அமைப்புகள் சங்கங்கள் செய்து இருந்தன. இது தவிர மாலையில் தேநீர் காபி சுக்குகாபி சுண்டலும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அறுபத்துமூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர்லஸ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாடவீதிகளில் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். அறுபத்துமூவர் விழாவை காண பக்தர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் மாடவீதிகளில் கைப்பொருட்கள் பொம்மைகள் பெண்களுக்கான மணி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment