Saturday, April 7, 2012

ஜீ.எல்.பீரிஸ் - மாலைத்தீவு ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தை!

Friday, April, 06, 2012
இலங்கை::மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

மாலைத்தீவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக மாலைத்தீவு அரசாங்கத்திற்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக இலங்கைத் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன...

மாலைதீவிற்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாட்டிற்கும் இடையிலான நெருங்கிய வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.

மாலைதீவிற்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என பீரிஸ் உறுதி செய்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வியாழன் அன்று மாலைதீவிற்குச் சென்றார்.

No comments:

Post a Comment