Pages

Monday, April 2, 2012

ராஜிவ் கொலை தொடர்பில் அமெரிக்கா கருத்து!

Monday, April 02, 2012
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டமை, இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று வில்லியம் எச் எவேரி என்ற அமெரிக்காவின் ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் பயமும் அமரிக்காவின் கனவும் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புதிய நூல் ஒன்றில் இந்தக்கருத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்ய அல்லது, கொலை செய்வதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும்.

பிரபாகரனை கைதுசெய்து அவரின் மீது விசாரணை நடத்தி பிராந்தியத்துக்கும் உலகத்துக்கும் தெளிவான செய்தி ஒன்றை இந்தியா அனுப்பியிருக்கலாம்

இதன்மூலம் இந்தியா தலைவர்களின் கொலைகளுக்கு எதிரான செயற்திட்டத்தை இந்தியாவினால் முன்னெடுத்திருக்கமுடியும்

அத்துடன் பிராந்தியத்தின் வல்லாதிக்கமிக்க நாடு என்பதை இந்தியாவினால் நிரூபித்திருக்கமுடியும்

எனினும் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர், இலங்கை விடயத்தில் தலையிடாப்போக்கை கொண்டிருந்ததன் மூலம் உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு என்ற நிலையை பல பெறுமதிமிக்க வருடங்களாக இந்தியா இழந்துவிட்டது

இந்தநிலையில் 1998 ஆம் அணுவாயுத பரிசோதனையின் பின்னர் இந்தியாவினால் பிராந்திய வல்லரவு என்ற நிலையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்ததாக வில்லியம் எச் எவேரி குறிப்பிட்டுள்ளார்

எவேரி, அமரிக்க ஜனாதிபதிகளான பில் கிளிங்டன், ஜோர்ஜ் டபில்யூ புஸ ஆகியோரின் நிர்வாகங்களின் போது அமரிக்க ராஜாங்க திணைக்கத்தில் பணியாற்றியவராவார்.

No comments:

Post a Comment