Thursday, April 12, 2012

குணரட்னமும், திமுத்துவும் கூறுவது புதிய தொலைக்காட்சி நாடகம் போன்றது - அமைச்சர் மேர்வின் சில்வா!

Thursday, April 12, 2012
இலங்கை::முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் மற்றும் திமுத்து ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்ட கதையை கேட்கும் போது, எழுத்தாளர் கருணாசேன ஜயலத்தின் 'ஊமை இதயம்' என்ற கதையின் வரும் தம்மி சுதத் என்ற கதாபாத்திரமே நினைவுக்கு வருவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது குணரட்னமும், திமுத்துவும் நடித்த புதிய தொலைக்காட்சி நாடகம் போன்றது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த தொலைக்காட்சி நாடகத்தில் கடத்தலில் இருந்து விடப்பட்டு வந்த திமுத்து, தனது கண்களை கட்டி அழைத்துச் சென்றதாக கூறியதுடன் இடையில் இரண்டு பேர் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்றதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார். கண்கள் கட்டப்படிருந்த திமுத்து, எப்படி இரண்டு பேர் வாகனத்தில் இருந்து இறங்கி சென்றதை பார்த்தார் என்பது ஆச்சரியமானது.

அத்துடன் தன்னை கடத்தியவர்கள் ஜே.வி.பி பற்றி விசாரித்தாக திமுத்து கூறியிருந்தார். ஜே.வி.பியை பற்றி ஏன் திமுத்துவிடம் விசாரிக்க வேண்டும்.அதேபோல் திமுத்து ஆட்டிகல விடுவிக்கப்பட்ட உடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மிகப்பெரிய ஆச்சரியம் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அதேபோல் திருட்டுத்தனமாக இலங்கைக்குள் வந்து, வெட்;கமற்ற வேலைகளை செய்ய குணரட்னத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. குணரட்னத்தின் அவுஸ்திரேலிய குடியுரிமை மூலம் இந்த சர்வதேச சூழ்ச்சி தெளிவாகியுள்ளது. இவர்கள் இதன் மூலம் நாட்டை காப்பற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் படையினர் ஆகியோருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி மீண்டும் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தவே முயற்சித்துள்ளனர்.

இப்படியான சூழ்ச்சிகளை செய்து, இராணுவத்தினர் மற்றும் நாட்டை அவப்பெயருக்கு உட்படுத்தாது, தேர்தலில் அரசியல்வாதிகளுடன் போட்டியிட வேண்டும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment