Pages

Friday, April 13, 2012

மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையே பிணைப்பை ஏற்படுத்துவதே புத்தாண்டு - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, April, 13, 2012
இலங்கை::மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டில் பாரம்பரியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செற்படுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் சமாதானம் மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என்று ஜனாதிபதி தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு தேசிய விழாவாகும் எனவும் இந்த புத்தாண்டு உள்ளங்களுக்கு புதிய உணர்வுகளையும் சிந்தனைகளையும் கொண்டுவருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வாழ்க்கையையும் சமூகத்தை துணிவுடன் பார்ப்பதற்கான வழியைக் காட்டுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அனைவர் மத்தியிலும் நட்புறவையும் கூட்டுறவையும் கட்டியெழுப்ப எல்லா வகையிலும் முயற்சிப்பது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுடன் இணைந்ததாக கடைப்பிடிக்கப்படும் பல்வேறு பாரம்பரியங்கள் குடும்பத்திற்கும் கிராமத்திற்கும் இடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment