Pages

Friday, April 6, 2012

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் பெரிய வெள்ளி தினம் இன்று!

Friday, April, 06, 2012
சென்னை::உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று பெரிய வெள்ளிக்கிழமை தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

உலகலாவிய ரீதியில் கிறிஸ்தவர்கள் இன்றைய நாளில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும் இறப்பையும் நினைவு கூறுகின்றனர்.

பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்துவின் இறப்பை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.

இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களை சுமந்த மனுக்குமாரன் இயேசு கிறிஸ்து கல்வாரி மலை நோக்கிச் சென்று, இவ்வாறான ஓர் நாளிலேயே தன் இன்னுயிரை இரட்சிப்பின் மேன்மை கருதி தியாகம் செய்தார்.

கொள்ளை புரிந்து கொலை தீர்ப்பு பெற்ற இரு கள்வர்களுடன் காசினியைக் காப்பதற்காய் வந்த பரலோகப் பிதாவின் ஒரே குமாரன் தன் உயிரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார்.

தாம் சிலுவையில் அறையப்படப் போவதை அறிந்திருந்தாலும் அவர் சிலுவை மரணம் வரை தம்மை தாழ்த்தினார் என பரிசுத்த வேதாகம் கூறுகின்றது.

இயேசு கிறிஸ்துவின் தியாகம், இரட்சிப்பின் மேன்மை மற்றும் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் நோக்கில் கிறிஸ்தவப் பெருமக்களால் பெரிய வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment