Pages

Tuesday, April 3, 2012

ஜெனீவாவில் நிறைவேறியது வெறும் தீர்மானமே,அரசின் கைகளிலேதான் எல்லாமே தங்கியுள்ளது:அடுத்த கட்டம் குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்காவிடின் எதிர்காலம் ஆபத்

Tuesday, April, 03, 2012
இலங்கை::ஜெனீவாவில் நிறைவேறியது வெறும் தீர்மானமே,அரசின் கைகளிலேதான் எல்லாமே தங்கியுள்ளது:அடுத்த கட்டம் குறித்து தமிழ் கட்சிகள் சிந்திக்காவிடின் எதிர்காலம் ஆபத்தில்:-

தமிழ்க் கட்சிகளிடையேயும், அக்கட்சிகளுக்குள் காணப்படும் பிளவுகளும், உட்கட்சி முரண்பாடுகளும் தலைமைப் போட்டிகளும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை மேலும் இழுத்தடித்துச் செல்லவே வழிவகுக்கும் என அரசியல் அவதானிகளும், தமிழ்ப் புத்திஜீவிகளும் தெரிவித்துள்ளனர்.ஜெனீவாவில் என்னதான் தீர்மானம் எட்டப்பட்டாலும் உள்நாட்டில் தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் கலந்துரையாடியே இறுதித் தீர்வைக் காண வேண்டும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

ஆனால் இதற்கு அரசாங்கம் தயாராக உள்ளபோதும் தமிழ்க் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையும், க்கட்சிகளிடையே காணப்படும் உட் கட்சிப் பூசல்களும் தீர்வைக் காணும் விடயத்தில் காலதாமதத்தை ஏற்படுத்திச் சென்று விடும் எனவும் புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்க் கட்சிகள் தமக்கு வாக்களித்த மக்களது நன்மை கருதியும், நாட்டின் எதிர்காலம் குறித்தும் அக்கறை எடுத்துச் செயற்படுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் வெறுமனே பிரேரணையை நிறைவேற்றியுள்ளதால் வெற்றி கண்டு விட்டதாகவும் எல்லாம் சரியாகி விட்டதாகவும் அர்த்தம் கொள்ளக் கூடாது. இனிமேல்தான் எல்லாமே என்றெண்ணிச் செயற்பட வேண்டும். அத்துடன் ஜெனீவா தீர்மானம் நிறைவேறியமைக்கு உரிமை கொண்டாடுவதை விடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதே சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் உறுதியாகவே உள்ளார். அவர் நிபுணர்களைக் கொண்டு தயாரித்த கற்றறிந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த தயாராகவே உள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தைத் தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment