Friday, April 13, 2012

நான்கு விபத்துக்களில் நால்வர் பலி!

Friday, April, 13, 2012
இலங்கை::ஹப்புத்தளை, கிளிநொச்சி, வாரியபொல மற்றும் நவகத்தேகம பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹப்புத்தளை நகரில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நவத்தேகம பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment