Sunday, April 8, 2012

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமற்றது-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன்!!

Sunday, April, 08, 2012
இலங்கை::அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பினரின் மத்தியஸ்தம் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் சில உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதிலும் அது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பினரை ஈடுபடுத்த வேண்டுமென கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, சார்க் பிராந்திய வலய அமைப்பு அல்லது வேறும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தரப்பின் மத்தியஸ்தத்துடன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment