Pages

Thursday, April 5, 2012

வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன!

Thursday, April 05, 2012
இலங்கை::வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கைத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அமைக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் நாட்டின் நன்மதிப்பையும், ஆதரவினையும் திரட்டும் நோக்கில் புதிய தூதரகங்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது சில நாடுகளில் இயங்கி வரும் தூதரகங்களின் முக்கியத்துவம் குறைவடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தந்திரோபாய அடிப்படையில் வேறும் நாடுகளுடன் கூடுதல் உறவுகளை பேண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment