Friday, April, 13, 2012தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் அமெரிக்க மக்கள் சார்பாக வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
சுமார் 150 வருடங்களுக்கும் மேலாக நட்புடனும் பங்குதாரராகவும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கியத்திற்கான முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான செயற்பாடுகளை அமெரிக்கா மேற்கொள்வதாக ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டமானது குடும்ப மற்றும் நட்பு ரீதியிலான உறுவுகளை புதுப்பிப்பதன் ஊடாக மக்கள் மத்தியில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுமை மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து ஜனநாயக விழுமியங்களினால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்குள்ளும் வெளிநாடு சென்றிருக்கின்ற அனைத்து இலங்கையர்களுக்கும் இது சந்தர்ப்பமாகும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment