Tuesday, April, 03, 2012இலங்கை::இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடையாது தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சரணடையாது தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 12000 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தப்பிச் சென்ற முன்னாள் புலி உறுப்பினர்களையும் இந்த நாட்டின் பொறுப்பு மிக்க பிரஜைகளாக உருவாக்குவதே இந்த தேடுதல் வேட்டையின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment