Friday, April 13, 2012

இலங்கை வடக்கு கிழக்கில் 90 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது-தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி!

Friday, April, 13, 2012
இலங்கை::வடக்கு கிழக்கில் 90 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது சர்வதேச அமைப்புக்கள் 12 உடன் இலங்கையின் அமைப்புக்கள் சிலவும் இணைந்து வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இப்பிரதேசங்களில் அதிகரித்து காணப்படும் விச முள்ளுள்ள மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள் காரணமாக கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளில் சிறு தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்ணிவெடி அகற்றுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்களில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் விரைவில் ஏனைய பகுதிகளிலும் கண்ணிவெடிகள் அகற்றப்படும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment