Monday, April 9, 2012

துபாயிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் சிகரெட் வழங்கப்படாததால் அந்நிலையத்திற்கு தீவைத்த குற்றத்திற்காக இலங்கையர் ஒருவர் உட்பட 8 பேருக்கு 3 வருடகால சிறை!

Monday, April, 09, 2012
துபாயிலுள்ள தடுப்பு நிலையமொன்றில் சிகரெட் வழங்கப்படாததால் அந்நிலையத்திற்கு தீவைத்த குற்றத்திற்காக இலங்கையர் ஒருவர் உட்பட 8 பேருக்கு 3 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ஐவர், ஈரானியர் ஒருவர், பாகிஸ்தானியர் ஒருவரும் இவர்களில் அடங்குகின்றனர்.

இவர்கள் ஏனைய கைதிகள் சகிதம் அல் ரபா பொலிஸ் நிலையத்திலுள்ள தடுப்பு முகாமல் வைக்கப்பட்டிருந்தபோது, தமக்கு சிகரெட் வழங்கக் கோரியும் அதிகாலை 2 மணிவரை தொலைபேசியை பயன்படுத்த அனுமதி கோரியும் கடந்த வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அடுத்தநாள் இவர்கள் தடுப்பு முகாமிலுள்ள கமெராக்களை கடதாசியினாலும் பற்பசையினாலும் மறைத்துவிட்டு, பற்றரிகள், வயர் மூலம் தீயை உருவாக்கியதாகவும் கடதாசியில் தீயை பற்றவைத்து மெத்தைகள், போர்வைகள் ஆகியவற்றையும் தீக்கிரையாக்கியதாகவும் மேற்படி பாகிஸ்தான் பிரஜை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment