Pages

Tuesday, April 10, 2012

சுவிஸ் பனிமலையில் கேபிள் காரில் சிக்கிய 75 பயணிகள் மீட்பு!

Tuesday, April 10, 2012
ஜெனிவா::சுவிட்சர்லாந்து செயின்ட் மோரிட்ஸ் ரெசார்ட் பகுதியில் உயர்ந்த பனிமலைகள் உள்ளன. இவற்றை சுற்றிப் பார்க்க உலகளவில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். பனி மலையை சுற்றிக் காட்ட, 10 ஆயிரம் அடி உயரத்தில் செல்லும் கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 75 சுற்றுலா பயணிகள் பனிமலையை சுற்றிப் பார்க்க நேற்று கேபிள் காரில் சென்றனர். கிளிட்ஸ் பனிமலை பகுதியில் கேபிள் கார் சென்ற போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நின்றுவிட்டது. பயணிகள் பதற்றம் அடைந்து அலறினர். அந்தரந்தில் கார் தொங்கி கொண்டிருந்தது. தகவல் அறிந்து மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் விரைந்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ÔÔகேபிள் காரில் இருந்த பயணிகளை மீட்க 3 மணி நேரம் ஆனது. யாருக்கும் காயம் இல்லைÕÕ என்றனர்.

No comments:

Post a Comment