Friday, April, 13, 2012இலங்கை::புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள 700 முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை முற்றாக விடுவிப்பதற்கு மேலும்; ஒரு வருடகாலம் செல்லும் என புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் இந்த 700 பேருக்கும் விஷேட வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து முன்னாள் புலிபோராளிகள் பலர் இன்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்கி, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கடையில், தமிழ் - சிங்கள புத்தாண்டை புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் போராளிகளுக்கான விஷேட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment