Friday, April 6, 2012

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

Friday, April, 06, 2012
ராஞ்சி::ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் காரம்தின் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலரை அடையாளம் கண்டு சரண் அடைய எச்சரித்தார்கள். ஆனால் அவர்களோ பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதை அடுத்து இவர்களும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த 5 மணி நேர துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் இதில் பலியானார்.

No comments:

Post a Comment