Wednesday,April,04,2012இலங்கை::போதையூட்டும் ஒருவகை புகையிலை அடங்கிய சுமார் 6000 பக்கெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு வந்த பெண் ஒருவரே போதையூட்டும் புகையிலை பக்கெட்டுகளுடன் வந்துள்ளதாக சுங்கப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 54 கிலோகிராம் புகையிலை பக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மூன்று இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இந்தப் புகையிலை தொகையை கொண்டுவந்த பெண், 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இலஞ்சம் பெற்ற தொழிலாளர் திணைக்கள உத்தியோகத்தர் கைது!
ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் தொழிலாளர் திணைக்களத்தின் கொழும்பு தெற்கு பிரிவின் தொழில் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை - கெரவலப்பிட்டி பகுதியில் குறித்த நபர் கைது!
நீண்டகால நிலுவை தொடர்பில் தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யாது இருப்பதற்காக, கைது செய்யப்பட்ட நபர் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் கணக்காய்வாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரான தொழில் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment