Saturday, April 14, 2012

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நிறைவு:5 நாளில் 7,000 பேர் பங்கேற்பு!

Saturday, April, 14, 2012
திருச்சி::திருச்சியில் 5 நாட்கள் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நேற்று நிறைவடைந்தது. இந்த முகாமில் 7,000 இளைஞர்கள் பங்கேற்றனர்.
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 9ம் தேதி ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 15 மாவட்டத்தினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

முதல் 2 நாட்கள் சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் சிப்பாய் நர்சிங் உதவியாளர் பணிகளுக்கு ஆள் தேர்வு நடந்தது. அடுத்த 2 நாட்கள் சிப்பாய் பொதுப்பணிக்கு ஆள்தேர்வு நடைபெற்றது. சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு நேற்று முன்தினம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் இறுதி நாளான நேற்றைய முகாமில் உடல்திறன் தேர்வில் பங்கேற்றனர்.

முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந¢த திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் விவேக் டாவர் கூறுகையில், Ô5 நாள் முகாமில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். அதுதொடர்பான விவரம் சம்பந்தப் பட்டோருக்கு அனுப்பப்படும். இவர்களது புகைப்படம் மற்றும் ரேகைகள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள்தேர்வு அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்பட்டன‘‘ என்றார்.

15 மாவட்டங்களில் இருந்து ஆள்சேர்ப்பு
5 நாள் முகாம் நடந்தது.
சுமார் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.
இதுபற்றிய விவரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.

No comments:

Post a Comment