Saturday, April 14, 2012

வெளிநாட்டு சுற்றுப் பயணச் செலவு ரூ.205 கோடி - புனேவில் 5 ஏக்கர் நிலம் : சர்ச்சையில் ஜனாதிபதி

Saturday, April, 14, 2012
புதுடில்லி::ஜானதிபதி பிரதிபா பாட்டில் வெளிநாட்டு சுற்றுப் பயணச் செலவு 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மிகுந்த சர்ச்சையை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே, புனேவில் ஜனாதிபதிக்கு 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பது அடுத்த சர்ச்சைக்கு ஆரம்பம்.

தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப் பயணச் செலவு ரூ.205 கோடி என தகவல் தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி பிரதிபா பாட்டில் ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற்ற பிறகு அவர் வசிப்பதற்காக, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அவருக்கு 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ‘ஜஸ்டிஸ் பார் ஜவான் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் பட்டீல் தெரிவித்ததாவது, ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி போடப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிலத்தில் இருந்த வெள்ளையர் கால இரண்டு கட்டிடங்களை இடித்து விட்டு, ஜனாதிபதிக்காக புதிய வீடு கட்டி வருகிறார்கள். 4,500 சதுர அடி பரப்புள்ள வீடு கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீட்டுக்காக, 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி எழுப்பியது ஏன்? என தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 ன் படி , ராணுவ உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இது வரைக்கும் பதில் வரவில்லை என தெரிவித்தார்.

No comments:

Post a Comment